சிறப்பாக நடைபெற்று முடிந்த M I B இன் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும்

Maruthamunai Intelligent Boys அமைப்பின் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும் கடந்த 31.07.2012ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.59 மணிக்கு M I B அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் அமைப்பின் ஸ்தாபகர் SMM. அபூபக்கர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக M I B இன் சட்ட ஆலோசகரும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமாகிய சட்டத்தரணி AM. றகீப் அவர்களும், கௌரவ அதிதிகளாக MLA Group of Company இன் தலைவர் MA. அப்துல் அக்ரம் அவர்களும், MI. அறுாஸ் B.A அவர்களும், அதிதிகளாக M I B இன் மீயுயர்பீட உறுப்பினர்களும் M I B இன்அபிமானிகளும் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 5.15 மணிக்கு மீயுயர்பீட உறுப்பினர்களின் விஷேட கூட்டம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இப்தார் வைபவம் நடைபெற்றது. இரவு 6.45 மணிக்கு Maruthamunai Intelligent Boys அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைப்பின் உறுப்பினர் ZA. றிம்ஸி அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமானது. தேசியத்தலைவர் AM. முஜீப் ஆசிரியர் அவர்களின் தலைமையுரை அடுத்து இடம்பெற்றது. அமைப்பின் தோற்றமும் அதன் நோக்கங்கள் பற்றியும் அமைப்பின் ஸ்தாபகர் SMM. அபூபக்கர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து Maruthamunai Intelligent Boys அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைப்பின் மீயுயர்பீட உறுப்பினரும் ஆலோசகருமாகிய MS. அமானுல்லா ஆசிரியர் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இணையத்தளத்தின் விளக்கவுரையை Maruthamunai Intelligent Boys அமைப்பின் தவிசாளர் AJ. துவைஜ் அஹமட் வருகைதந்த அனைவருக்கும் தொகுத்து வழங்கினார்.
அதனை தொடர்ந்து நிகழ்வின் பிரதம அதிதியும், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், Maruthamunai Intelligent Boys அமைப்பின் சட்ட ஆலோசகருமாகிய சட்டத்தரணி AM. றகீப் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் அரசியலுக்கப்பால் இந்த இளைஞர் சமுதாயத்துடன் இணைந்து இவர்களுக்கும் எனக்குமிடையிலான திரையை விலக்கி சமூக சேவையை மேற்கொள்வதற்கு ஆவலாக உள்ளேன். மேலும் இந்த அமைப்பினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் என்னால் இயன்ற அளவு செய்து தருவேன் என்றும் குறிப்பிட்டார். நிகழ்வின் இறுதியில் Maruthamunai Intelligent Boys அமைப்பின் செயலாளர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. இதன் பின்னர் M I B ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்திலும் அனைவரும் கலந்துகொண்டனர்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: