தங்கமகன் தம்ஸக் கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழா அண்மையில் திருகோணமலை மக்கெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அல் – மனார் மத்திய கல்லுாரியின் மாணவன் NFA. தம்ஸக் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் 1ம் இடத்தை பெற்று தங்கப்பதக்கம் வென்று பாடசாலைக்கும் மருதமுனை மண்ணுக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

அன்றைய தினம் இரவு 8 மணியளவில் மருதமுனையை வந்தடைந்த அவரை Maruthamunai Intelligent Boys அமைப்பினர் பாடசாலை முன்றலில் மாலை அணுவித்து வரவேற்றனர். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் Dr. SMMS. உமர் மௌலானா, Maruthamunai Intelligent Boys அமைப்பின் மீயுயர்பீட உறுப்பினர் MA. சிறாஜூதீன் ஆசிரியர் மற்றும் பல ஆசிரியர்கள், பாடசாலை அபிமானிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்

09.07.2012ம் திகதி நடைபெற்ற அல் – மனார் மத்திய கல்லுாரியின் A/L தின விழாவின் போது தங்கப்பதக்கம் வென்ற தம்ஸக் அவர்களுக்கு பாடசாலையின் அதிபர் மற்றும் Maruthamunai Intelligent Boys அமைப்பின் ஸ்தாபகர், அரசியலின் தந்தை SMM. அபூபக்கர் ஆசிரியர் ஆகியோர் இணைந்து வெற்றி வீரருக்கு Maruthamunai Intelligent Boys வழங்கிய வெற்றிக் கேடயத்தை வழங்கி வைத்தனர். இதன் போது Maruthamunai Intelligent Boys அமைப்பின் உறுப்பினர்களான MJM. ஜெஸ்லி மற்றும் ZA. றிம்ஸி ஆகியோரும் அரங்கில் பிரசன்னமாயினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: