வேட்பாளர்களை சந்திக்கிறது M I B

Maruthamunai Intelligent Boys அமைப்பின் தேர்தல் கால நடவடிக்கையின் ஓர் அம்சமாக மருதமுனை சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களையும் 31.07.2012 முதல் சந்திக்கவுள்ளது. இதன் முதல் கட்டமாக 31.07.2012 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 9ம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற ஜமாலியா சுபைர் அவர்களை அவரது தேர்தல் காரியாலயத்தில் M I B உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர். மேலும் இரவு 8.30 மணிக்கு ஐக்கிய தேசிய கட்சியில் 16ம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற சுவீஸ் சித்தீக் அவர்களையும் M I B உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர்.

Leave a comment