மருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் இப்தார் நிகழ்வு

மருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அதன் தலைவர் சமுர்த்தி உத்தியோகத்தர் ARM. சாலிஹ் தலைமையில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் 08.08.2012 புதன்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது. 08.09.2012ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விஷேட விருந்தினராக கல்முனை மாநகர சபை கௌரவ முதல்வர் கலாநிதி.  சிராஸ் மீராசாஹிப் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், மருதமுனை மண்ணின் நம்பிக்கையுமான 6ம் இலக்க வேட்பாளர் AR. அமீர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் 14ம் இலக்க வேட்பாளர் ML. துல்கர்நயீம் துல்சான் மற்றும் 3ம் இலக்க வேட்பாளர் ஜப்பார் அலி அவர்களும் கலந்து கொண்டார்.

மௌலவி ஹிஸ்லி அவர்களின் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து இப்தார் நிகழ்வு நடைபெற்றது. மஃரிப் தொழுகைகக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மஃரிப் தொழுகை முடிவடைந்தவுடன் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், மருதமுனை மண்ணின் நம்பிக்கையுமான 6ம் இலக்க வேட்பாளர் AR. அமீர் உரையாற்றினார். அவர் தனது உரையில் வருகை தந்த அதிதிகளை வரவேற்று சீரற்ற காலநிலையின் காரணமாக நடைபெறவிருந்த கலந்துரையாடல் சுருக்கமாக நடைபெறும் என கூறி கௌரவ முதல்வர் கலாநிதி.  சிராஸ் மீராசாஹிப் அவர்களை உரையாற்றுமாறு அழைத்தார். வருகை தந்த அனைவரும் ஒன்றுகூடியிருக்க கௌரவ முதல்வர் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், நாங்கள் தற்போது மிக முக்கியமான ஒரு தேர்தல் காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். அதைவிட முக்கியமாக நீங்கள் மருதமுனை மண்ணுக்கு ஒரு உறுப்பினரை வென்றெடுக்க வேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. இத்தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸை வெல்ல வைப்பதன் மூலம் நாங்கள் கிழக்கு மாகாண சபையில் ஓர் உச்ச நிலையை அடையவிருக்கின்றோம். நான் மாநகர சபையை பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகின்றன இந்தக் காலத்தில் சகோதரர் அமீர் அவர்கள் மாநகர சபை வேலைகள் அனைத்திலும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்திருக்கின்றார். எனவே இந்தத் தேர்தலில் நாங்கள் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதற்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் நான் அவருக்கு செய்யக் காத்திருக்கின்றேன். மேலும் உங்களுடைய வாக்குகளை நீங்கள் அமீர் அவர்களுக்கு வழங்க வேண்டும் மேலும் உங்களது ஏனைய வாக்குகளில் ஒன்றை உங்கள் ஊரைச்சேர்ந்த சகோதரர் துல்சான் அவர்களுக்கும் மற்றைய வாக்கையும் நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உங்களுடைய ஊரின் பிரதிநிதித்துவத்தை நீங்கள் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய ஊர்களுடனும்  இணக்கப்பாடுகளை மேற்கொண்டு இதனை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் இத்தேர்தலில் நீங்கள் கட்டாயம் கட்சியை வெல்ல வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: