நீதியானதும் நேர்மையானதுமான ஓர் தேர்தல் நடந்தால்…!

கிழக்குத் தேர்தலின் பின்னணி

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதம், அதன் பின்னரான சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வின் மீதான அரசின் நடவடிக்கைள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே. இலங்கை அரசையும் அதன் தலைமைகளையும் குற்றக் கூண்டில் நிறுத்தியிருக்கும் இந்நிழ்வுகள்தான் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களின் போது ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள், அரசு முறைப்ப பயணங்களின் போது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள், ஐ.நா. மனித உரிமைத் தீர்மானங்கள் ஆகியனவும் ஏனயவுமாகும். Read more of this post

கிழக்கில் அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் – களனி பல்கலைக்கழக ஆய்வில் முடிவு

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 59 வீத வாக்குகளால் ஆட்சியைக் கைப்பற்றுமென களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் நடைபெறவிருக்கும் 7 மாவட்டங்களிலும் களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மாணவர்கள் இக்கருத்துக்கணிப்பை நடத்தியதாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். Read more of this post

“கிழக்கு தேர்தல்” வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகள் முடிவுகள் எவ்வாறு அமையும்..?

கிழக்கு மாகாண சபை தேர்தலில் எந்தக் கட்சி அறுதிப் பெரும்பான்மையினைப் பெற்று ஆட்சி அமைத்துக் கொள்ளும் என்பதில் உறுதியான ஒரு நிலைப்பாடு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், வேட்பாளர்களிடையே இல்லாமல் இருக்கின்றது.

ஏனெனில், இத் தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையினை பெற்றுக் கொள்ளமாட்டாது. கிழக்கு மாகாண சபை தேர்தல் ஒரு முத்தரப்பு போட்டியாக உள்ளது. Read more of this post

6 உயிர்களை பலிகொண்ட நிந்தவூர் வீதி விபத்து

நிந்தவூர்  அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கர வாகனம் மீது பஸ் ஒன்று மோதியதால்  முச்சக்கர வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


இறந்தவர்களில்  மூன்று பெண்கள், ஒரு ஆண், ஒரு சிறுவன், ஒரு சிறுமி ஆகியோர் அடங்குகின்றனர். Read more of this post

M I B இன் தேசிய தலைவருடைய செய்தி

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் M I B சமூக சேவை அமைப்பான நாம் பக்கச் சார்பற்ற முறையில் வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் உதவிகளை செய்ய முன்வர வேண்டும். 08.09.2012ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தினத்தன்று மருதமுனையில் அளிக்கப்படுகின்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் மக்கள் கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அது நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ஆகாமல் செல்லுபடியாகும் வாக்குகளாவதற்குரிய செயற்பாடுகளை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும். வாக்களிக்க செல்ல சிரமப்படுகின்றவர்களுக்கு கட்சிப் பாகுபாடின்றி வாக்களிக்கும் நிலையங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கும் M I B உறுப்பினர்கள் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். Read more of this post

50 பேர் கொண்ட குழு ஜனாதிபதி தலைமையில் ஈரான் பயணமாகவுள்ளது

ஈரானில் ஓகஸ்ட் 30, 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அணிசேரா அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாட்டுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஈரான் செல்லவுள்ளார். ஜனாதிபதி தலைமையில் 50 பேர் கொண்ட குழுவொன்று ஈரான் செல்லவுள்ளது. Read more of this post

மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 65m மக்களின் ஆர்ப்பாட்டம்

மருதமுனையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு இதுவரை வீடுகள் வழங்கப்படாத 65m பிரதேச மக்கள் தமது வீடுகளை பெற்றுத்தருமாறு கோரி இன்று 24.08.2012ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். மருதமுனை மஸ்ஜிதுன் நுார் ஜூம்ஆப் பள்ளியில் இருந்து ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டம் பிரதான வீதிக்கு வந்து பின்னர் பிரதான வீதியூடாக 65m வீட்டுத்திட்டம் வரை சென்றது. Read more of this post

PMGG இன் சூறாசபை மருதமுனையில் நடத்திய கலந்துரையாடல்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள் மருதமுனையிலுள்ள பிரமுகர்களை சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். PMGGயின் மருதமுனை செயற்குழு உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பு நேற்று இரவு 8.30 மணியளவில் மருதமுனை மக்பூலியா வீதியில் அமைந்துள்ள கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. Read more of this post

மருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் இப்தார் நிகழ்வு

மருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அதன் தலைவர் சமுர்த்தி உத்தியோகத்தர் ARM. சாலிஹ் தலைமையில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் 08.08.2012 புதன்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது. 08.09.2012ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விஷேட விருந்தினராக கல்முனை மாநகர சபை கௌரவ முதல்வர் கலாநிதி.  சிராஸ் மீராசாஹிப் அவர்கள் கலந்து கொண்டார். Read more of this post

சிறப்பாக நடைபெற்று முடிந்த M I B இன் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும்

Maruthamunai Intelligent Boys அமைப்பின் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும் கடந்த 31.07.2012ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.59 மணிக்கு M I B அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் அமைப்பின் ஸ்தாபகர் SMM. அபூபக்கர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. Read more of this post